வீட்டிலிருந்து நாம் வெளியில் செல்லும் போது அனைவரும் கையில் ஒரு பேனாவை எடுத்து கொண்டு செல்லுமாறு தற்போது காவல்துறையினர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். வெளியில் செல்லும்போது உங்கள் தேவையை பெற்றுக்கொண்டு பதிவு புத்தகத்தில் தகவலை பதிவு செய்வதற்காக பேனா ஒன்றை வீட்டில் இருந்து எடுத்துக் கொண்டு செல்லுமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது அனைத்து வர்த்தக நிலையங்களான பெரிய மால்கள் மற்றும் வேலை பார்க்கும் இடங்களில் புதிதாக ஒருவர் செல்லும்போது அவருடைய தகவல்களை பதிவு செய்து கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே அனைவரும் கண்டிப்பாக கையில் ஒரு பேனா எடுத்து செல்ல வேண்டும் காவல்துறை அதிகாரி அஜித் ரோஹன உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் எப்பொழுதும் உங்களுக்கு என்று ஒரு பேனா வைத்திருப்பது பாதுகாப்பானதாக தான் இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.