Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

Breaking: வலிமை சூட்டிங்கில் அஜித் காயம் – அதிர்ச்சி தகவல் …!!

நடிகர் அஜித்தின் 60வது படமாக உருவாகி வரும் திரைப்படம்  ‘வலிமை’. இப்படத்தை நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்க போனி கப்பூர் தயாரிக்கிறார். அதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராகி வரும் இப்படத்தில், பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இடம்பெறுகின்றன. படம் சுமார் 60% அளவிற்கு நிறைவடைந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு தடைபட்டது.

இந்நிலையில் ஊரடங்கு தளர்வில் வலிமை படத்தின் சூட்டிங் ஐதரபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. இதில் படமாக்கப்பட்ட சண்டை காட்சியில் நடிகர் அஜித் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காயத்திற்க்காக அஜித் ஆயோர்வேத சிகிச்சை பெற்று வருகின்றார். காயம் குணமடைய சில வாரங்கள் ஆகும் என்றும், அதுவரை அஜித் ஐதரபாத்தில் இருப்பர் என்றும் கூறப்படுகின்றது.

Categories

Tech |