தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து கொண்டே வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. தொடக்க காலத்தை விட தற்போது பாதிப்பு மிகக் குறைந்ததற்கு காரணம் தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளே ஆகும். தற்போது பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பே இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று 1,707 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7,64,989 ஆக கூடியுள்ளது. கொரோனா பாதிப்பு கூடுதலாக இருந்த சென்னையில் இன்று மட்டும் 477 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,10,601 ஆக கூடியுள்ளது. மேலும் இன்று மட்டும் தமிழ்நாட்டில் 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தமிழகத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1556 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 2653 பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.