கர்ப்பிணி பெண் ஒருவர் கோமாவில் இருந்து இரட்டை குழந்தை பெற்றெடுத்தது நம்பமுடியவில்லை என்று கூறியுள்ளார்.
பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் சிட்டி ஆஸ்பத்திரியில் வாதவியல் ஆலோசகரான Perpetual Uke என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனாவால் உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கர்ப்பிணியான இவர் மருத்துவமனையில் ஒரு முக்கியமான பராமரிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டரில் வைத்து, குணமடைவதற்காக கோமாவில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு சில வாரங்களுக்கு பிறகு இரண்டு இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டன. ஆனால் Perpetual Uke பிரசவத்தை அடுத்து 16 நாட்கள் கோமாவில் இருந்துள்ளார். இதையடுத்து பிரசவத்திற்கு இரண்டு வாரங்கள் கழித்து எழுந்தது நம்ப முடியவில்லை என்றும், இது தன்னுடைய இரட்டை குழந்தைகள் என்று மருத்துவமனை மருத்துவர்கள் கூறினாலும் அதை தான் நம்பவில்லை என்று நான்கு குழந்தைகளுக்கு தாயான Perpetual கூறியுள்ளார்.