இதுவரை கொரோனாவால் பாதிக்கப்படாத நாடு ஒன்று தற்போது முதன்முறையாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளது.தான்
பசிபிக்கில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான சமோவா நாட்டில் சுமார் 2 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த சிறிய நாட்டின் பிரதமராக துய்லீபா இருந்து வருகின்றார். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த நிலையில் தீவு நாடான சமோவாவில் மட்டும் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்நாட்டில் ஒரு நபருக்கு முதல் முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி மற்றும் வானொலி வழியே பேசிய பிரதமர் துய்லீபா, “பொதுமக்கள் அனைவரும் அமைதியாக இருங்கள், கொரோனாவிற்கான முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தொடர்ந்து கண்காணிப்பில் இருங்கள்.
முதன்முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் நியூசிலாந்தில் இருந்து விமானம் மூலம் சமோவா வந்த பின்பு 4 நாட்கள் கழித்து பரிசோதனை செய்தபோது தான் கொரோனா பாதிப்பு இருந்தது உறுதியானது. ஆனால் இரண்டாவது பரிசோதனையில் பாதிப்பில்லை. எனினும் தற்போது அவர் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்றும், இதுகுறித்து அமைச்சரவை கூடி நடப்பு நடைமுறைகளில் என்ன மாற்றம் செய்வது? என்பது பற்றி முடிவு செய்யப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.