Categories
தேசிய செய்திகள்

இப்போ இல்ல 7 வருஷத்திற்கு முன்னாடியே…. கொரோனாவை உருவாக்கிய வியாபாரி….!!

வியாபாரி ஒருவர் 7 வருடங்களுக்கு முன்னரே தனது கடைக்கு கரோனா என்று பெயர் வைத்ததால் தற்போது பிரபலமாகியாதல் மகிழ்ந்துள்ளார்.

கேரளாவில் உள்ள கலாத்திப்பேடி பகுதியில் வீட்டு அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. “கரோனா”என்ற பெயர் கொண்ட இந்த கடையை 7 வருடங்களுக்கு முன் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் என்பவர் நடத்தி வந்துள்ளார். லத்தீன் மொழியில் கரோனா என்பதற்கு கிரீடம் என்று பொருள். இதை அடிப்படையாக வைத்தே ஜார்ஜ் தனது கடைக்கு பெயர் சூட்டியுள்ளார். இந்நிலையில் இவர் இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களின் கவனத்தை தனது கடை ஈர்க்கும் என்று கண்டிப்பாக நினைத்திருக்க மாட்டார்.

தன் கடைக்கு இந்த பெயர் வைத்ததன் காரணமாக, கொரோனா காலத்தில் ஏராளமான வாடிக்கையாளர்கள் தனது கடைக்கு வந்ததால் வியாபாரம் நல்ல முறையில் நடந்தது  என்று கடை உரிமையாளர் ஜார்ஜ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இங்கு செடிகள், பானைகள் வீட்டு அலங்கார பொருட்கள் மற்றும் விளக்குகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கொரோனாவால் பல வியாபாரிகளின் தொழில் முடங்கியுள்ள நிலையில் தனது கடையின் பெயர் பிரபலமான காரணத்தால் வாடிக்கையாளர்களிடம் தனி கவனம் பெற்று தனது வியாபாரம் நல்ல முறையில் வளர்ந்திருப்பது ஜார்ஜை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |