Categories
உலக செய்திகள்

கிறிஸ்மஸுக்கு முன்னரே வருகிறது கொரோனா தடுப்பு…!!!

ஃபைசர்-பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசி விநியோகங்கள் கிறிஸ்துமஸுக்கு முன்பே தொடங்கலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜெர்மன் மருந்து நிறுவனம் ஒன்றுடன் இணைந்து அமெரிக்காவின் நிறுவனம் பக்கவிளைவுகளற்ற கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளதாக அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்தகவல் உலக நாடுகள் அனைத்தையும் திரும்பிப்பார்க்க வைத்தது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா இதற்கான அவசர கால அங்கீகாரத்தை வழங்கினால், கொரோனா வைரஸ் தடுப்பூசி கிறிஸ்மஸுக்கு முன்பு வரலாம் என்று பயோஎன்டெக் அறிவித்தது. பைசர் மற்றும் பயோஎன்டெக் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியின் இறுதிகட்ட சோதனை முடிவுகள் மூலம், அதற்கு தீவிரமான பக்க விளைவுகள் எதும் இல்லை என்பதும், 95 சதவீத தடுப்பாற்றலை கொண்டுள்ளது என்பது உறுதியானது.

“அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எப்.டி.ஏ) டிசம்பர் மாதம் மத்தியில் அவசரகால பயன்பாட்டை அனுமதிக்கக்கூடும் என்றும் எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், டிசம்பர் இரண்டாம் பாதியில் நாங்கள் ஒப்புதல் பெற்று கிறிஸ்துமஸுக்கு முன்பே டெலிவரியை தொடங்குவோம்” என்று பயோஎன்டெக் தலைமை நிர்வாகி உகுர் சாஹின் தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |