சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான பணியாளர்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான பணியாளர்கள் சேர்க்கைக்கான காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலியாக உள்ள தூய்மைப்பணியாளர்கள் அல்லது உதவியாளர்கள், இலகு அல்லது கனரக வாகன ஓட்டுநர்கள், பேட்டரி ரிக்ஷா ஆப்ரேட்டர்கள் (Operator) ஆகிய பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு கல்வித்தகுதியாக 8th, 10, 12thகொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் : சென்னை மாநகராட்சி
வேலைவாய்ப்பு வகை : அரசு வேலை
பணியின் பெயர் : சுகாதார பணியாளர் / உதவியாளர், டிரைவர்கள் மற்றும் பேட்டரி ரிக்ஷா ஆபரேட்டர்
மொத்த பணியிடங்கள் : 10,000
தேர்வு முறை : நேர்முகத்தேர்வு
கடைசி நாள் : 28/11/2020
18/11/2020 முதல் 28/11/2020 வரை தி.நகர், பார்த்தசாரதிபுரத்திலுள்ள சோமசுந்தரம் விளையாட்டு மைதானத்தில் நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது. ஆதார் கார்டு, பான்கார்டு, வீட்டு முகவரி சான்றிதழ், வங்கி கணக்கு விபரம் உள்ளிட்டவையுடன் 4 புகைப்படங்கள், பள்ளி சான்றிதழ் கொண்டு வரவேண்டும் என அறிவுத்தியுள்ளனர்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நேரம் : மேற்கண்ட நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 7 மணிவரை
கூடுதல் விபரங்களுக்கு 7338882241, 7338888166 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்