நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்று பகுதியில் அமைந்துள்ள குறுக்குத்துறை முருகன் கோவிலை கடுமையான வெள்ளம் சூழ்ந்துள்ள போதிலும் 300 ஆண்டுகளாகத் தாங்கி நின்று வரலாற்று சிறப்புமிக்க பொக்கிஷமாக திகழ்கிறது.
நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குறுக்குதுறை முருகன் திருக்கோவில் கடந்த 17 ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. கடந்த 300 ஆண்டுகளாக தாமிரபரணி ஆற்று வெள்ளத்தை தாக்குப்பிடித்து கம்பீரமாய் காட்சியளிக்கிறது. படகுபோல் கட்டப்பட்டுள்ள கோவிலின் அமைப்பே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. வெள்ளம் வரும் போதெல்லாம் இக்கோவில் மூழ்குவது வாடிக்கையாகவே இருந்தாலும் இதுவரை எந்த சேதமும் ஏற்படவில்லை.
தற்போது தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவிலை சுற்றி உள்ள கல் மண்டபங்களும் கோவில் பிரகாரம் போன்றவற்றிலும் தண்ணீர் சூழ்ந்து இருந்தாலும் கோயிலுக்கு எந்த வித சேதமும் ஏற்படவில்லை. வெள்ளப்பெருக்கால் பக்தர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில் கோவில் பூசாரிகள் மட்டும் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.