சென்னை சவுகார்பேட் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஜெயமாலா உட்பட மேலும் 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
சென்னை சவுகார் பேட்டையை சேர்ந்த அவரது மனைவி புஷ்பா மகன் சித்தர்ஜெந் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக சித்தனின் மனைவி ஜெயமாலா உள்ளிட்டோரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இவ்வழக்கில் கைதான உத்தமவிஜய் கைலாஷ், ரவிதாரநாத் ஆகியோரை 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் உத்தமவிஜய் கைலாஷ், ரவிதாரநாத் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது சகோதரி ஜெயமாலாவிற்க்கு கணவர் சித்தர்ஜெந் உள்ளிட்ட மூவரும் பாலியல் தொல்லை கொடுத்ததால் மூவரையும் சுட்டுக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதனிடையே மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தங்கி இருந்ததாக கூறப்பட்ட சித்தனின் மனைவி ஜெயமாலா அவரது சகோதரர் விலாஸ் ஆகியோர் புனேவில் இருந்து தப்பிச் சென்று டெல்லி அருகே உள்ள ஆக்ராவில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர். இதனையடுத்து ஜெயமாலா உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்து சென்னை அழைத்துவர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.