பீகார் மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர் திரு. மேவலால் சவுத்ரி பதவியேற்று 3 நாட்களில் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து ஐக்கிய ஜனதாதளம் தலைவர் நிதீஷ் குமார் பீகார் முதல்வராக தொடர்ந்து நான்காம் முறையாக பதவியேற்றார். மேலும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 12 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அந்த கட்சியை சேர்ந்த மேவலால் சவுத்ரி பீகார் கல்வித்துறை அமைச்சராக பதவியேற்றார்.
இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வந்த நிலையில் தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். இதனால் புதிதாக ஆட்சி அமைத்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ராஜினாமா செய்துள்ள திரு. மேவலால் சவுத்ரி உளவுத்துறை தேசிய கீதத்தை தவறாகப் பாடி சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.