தமிழகத்தில் கொரோனாவை தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பரவுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கருணாவுடன் சேர்த்தே டெங்கு காய்ச்சல் பரவுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் டெங்கு பரவத் தொடங்கியிருக்கிறது.
மேலும் மலேரியா மற்றும் சிக்கன் குனியா பரவும் அபாயம் தமிழகத்தில் அதிகமாக உள்ளது. பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி மற்றும் உடல்வலி இருந்தால் கொரோனாவுடன் டெங்கு பரிசோதனையும் கட்டாயம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.