உலகில் கொரோனாவை விட மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட உள்ளதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துள்ளது. அதிலிருந்து மீள முடியாமல் மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் உலகின் வெப்பநிலை உயரும் அபாயம் குறித்து காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கு இடையேயான குழு தெரிவித்துள்ளது.
உலகில் வெப்பநிலை 1.5 செல்சியஸ் உயர்ந்தால், உணவு பற்றாக்குறை, வாழ்வாதாரம் பாதிப்பு, மோசமான சுகாதார தாக்கங்கள் போன்றவை அதிகரிக்கும். இது கொரோனாவை விட மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்ற பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.