பலம் வாய்ந்த நாடாக மாறுவதற்காக சீனா பல்வேறு நாடுகளை குறி வைத்துள்ளதாக பரபரப்பு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் வெளியுறவுத்துறையானது 70 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சர்வதேச அளவில் வல்லரசு நாடாக திகழும் அமெரிக்காவின் இடத்தை சீனா பிடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறது. எனவே இதற்காக உலகின் பல நாடுகளையும் சீனா மிரட்டி வருகிறது. தற்போது இந்தியா வளர்ந்து வருவதால் தன்னுடைய எதிரியாக சீனாவை பார்க்கிறது. எனவே எனவே தான் இந்தியாவிற்கு பொருளாதார ரீதியாக சிக்கலை ஏற்படுத்துவதற்காக சீனா, இந்திய எல்லையை ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்தியாவானது, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் ராணுவ ரீதியிலான உறவு வைத்திருப்பதை கூட சீனா விரும்பவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி நாடுகளான தென்கொரியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தியா, வியட்நாம் மற்றும் ரஷ்யா போன்றவற்றையும் சீனா குறி வைத்துள்ளது குறிப்பிடதக்கது.