பணிக்காலம்
உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு வருடமாகவும், டேட்டா என்ட்ரி பயிற்சியாளராக இருக்க விண்ணப்பிப்பவர்கள் 15 மாதங்களாகவும் பணி காலம் இருக்கும்.
வயது வரம்பு
அக்டோபர் 30, 2020 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயது மிகாதவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி
தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் டிப்ளமோ படிப்பு 3 வருடம் முடித்திருக்க வேண்டும்.
டேட்டா பதிவிடும் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
ட்ரேடு பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பம் வழங்கப்படும் நாள் : நவம்பர் 4
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 22
தேர்வு முறை
இப்பணிகளில் எழுத்துத்தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 100 கேள்விகள் கேட்கப்படும் நிலையில் 40 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றதாகவும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.