நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலக பிரபல நடிகர் கார்த்தி பல ஹிட் படங்கள் கொடுத்து அசத்தியவர். இவர் நடிப்பில் வெளியான ‘கைதி’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார் .இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டவில்லை.
இந்த திரைப்படத்தில் கார்த்தி 2 கதாநாயகிகளுடன் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஏற்கனவே கார்த்தியின் இரட்டை வேட நடிப்பில் வெளியான ‘சிறுத்தை’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது . அதன் பிறகு இரட்டை வேடத்தில் கார்த்தி நடிக்கவுள்ள இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.