Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் 14 ஆயிரம் வேண்டுமா?… ஒரே ப்ரீமியம் செலுத்தினால் போதும்…!!!

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் ஒரு பிரீமியம் செலுத்தினால் போதும் உங்கள் வாழ்க்கை முற்றிலும் மாறிவிடும்.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான LIC (life India corporation) மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும், வருங்காலத் தேவைகாக்கவும் பல்வேறு அரிய நல்ல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. மத்திய மாநில அரசுகளின் மூலம் நடத்தப்படுவதால், எல்.ஐ.சி-யில் பணத்தை முதலீடு செய்வதில் பாதுகாப்பானது என மக்கள் நம்புகின்றனர்.

அண்மையில், எல்.ஐ.சி., நிறுவனம் தனது பழைய பாலிசி ஒன்றை புதுப்பித்து மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜீவன் அக்க்ஷய் (Jeevan Akshay) பாலிசி ஒரு வருடாந்திர சேமிப்பு திட்டம். இந்த பாலிசியின் சிறப்பு என்னவென்றல், இந்த பாலிசிக்கான தொகையை செலுத்திய உடனேயே பாலிசிதாரர்கள் மாதாந்திர பென்சனை கேட்டுப் பெற முடியும். . பல்வேறு திட்டங்களைக் காட்டிலும், இந்த பென்சன் தேவையாக உள்ளவர்களுக்கு இந்த ஜீவன் அக்‌ஷய் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 30 வயது முதல் 85 வயது வரையுள்ள அனைவரும் இந்த பாலிசி திட்டத்தில் இணையலாம்.

மருத்துவ பரிசோதனைகளுக்கான அவசியம் ஏதும் இல்லை. இந்திய குடிமக்கள் மட்டுமே இதில் முதலீடு செய்ய முடியும். ரூ.1 லட்சம் என்ற குறைந்தபட்ச முதலீட்டுடன் இந்த பாலிசியை எடுக்கலாம். பாலிசிதாரருக்கு 10 வகையான பிரிவுகளில் இந்த திட்டம் வழங்கப்படுகின்றன. இந்த பாலிசியில், குறிப்பிட்ட தொகையை நிரந்தர முதலீடு செய்தவுடனேயே, மாதந்தோறும் ரூ.14,000 பென்சன் கிடைக்கும். இந்த ஜீவன் அக்‌ஷய் பாலிசியில், முதலீடு செய்தவுடனேயே மாதந்தோறும் ரூ.14,000 பென்சனை நீங்கள் கேட்க முடியும். அதற்கு, Option ‘A’-வை அதாவது ‘Annuity payable for life at a uniform rate’ என்ற பிரிவைத் தேர்வு செய்ய வேண்டும்.

உதாரணத்துக்கு 36 வயதான ஒருவர் இந்த ஜீவன் அக்‌ஷய் பாலிசியை எடுக்கும்பட்சத்தில், அவருக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இங்கு பாருங்கள். இந்த பாலிஸியில் மொத்தமாக முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் ஒவ்வொரு மாதமும் 14 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறலாம். இந்தக் பாலிஸியின் கீழ், நீங்கள் உடனடியாக ஓய்வூதியம் பெற விரும்பினால் அதற்கு ஏற்ற வகையில் பாலிஸி வகையை தேர்வு செய்யலாம். ஒரு நபர் ஒவ்வொரு மாதமும் 14 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெற விரும்பினால், அவர் எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

வயது: 36
காப்பீட்டு தொகை: 30,00,000
மொத்த பிரீமியம்: 30,54,000

ஓய்வூதியம் (பென்ஷன்):
வருடாந்திர பென்ஷன்: 1,80,000
அரை ஆண்டு பென்ஷன்: 88,500
காலாண்டு பென்ஷன்: 43,913
மாதாந்திர பென்ஷன் : 14,550

இதன் மூலம் பாலிஸி தாரருக்கு மாதத்திற்கு ரூ.14550 ஓய்வூதியம் கிடைக்கும். பாலிசிதாரர் உயிர்வாழும் வரை இந்த ஓய்வூதியம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |