முருகனைக் கேவலமாக பேசிய கயவர்களை தண்டிக்க வலியுறுத்தி மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நேற்று பொதுக்கூட்டம் மற்றும் வேல் யாத்திரை குரங்குசாவடியில் வைத்து நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது பேசிய எல் முருகன் கூறுகையில், “கடுமையான விரதம் இருந்து நாம் பாதயாத்திரை மேற்கொண்டு வழிபடும் முருகனை கேவலமாக பேசிய கயவர் கூட்டத்தை யாரும் கண்டிக்கவில்லை.
ஆனால் பாஜக அவர்களை கண்டித்ததோடு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உடனடியாக அவர்களை கைது செய்ய வலியுறுத்தி தான் தற்போது யாத்திரை மேற்கொள்கிறது. திருச்செந்தூரில் டிசம்பர் 7ஆம் தேதி எங்கள் வேல் யாத்திரை முடிவடையும். நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தான் அதிக இடங்களை கைப்பற்றும்” என தெரிவித்துள்ளார்.