இந்த திடத்தில் கொரோனா பாதிப்பால் வேலையை இழந்தவர்களுக்கு தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (ESIC) சார்பாக சம்பளம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. வேலையை இழந்தவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய தொகை, விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் வழங்கப்படும். கொரோனா பாதிப்பால் வேலையை இழந்தவர்களுக்கும் வேலையை இழப்பவர்களுக்கும் 50 சதவீத சம்பளம் கிடைக்கும். இத்திட்டம் 2021 ஜூன் மாதம் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனாவின் www.esic.nic.in/. என்ற அதிகாரப்பூர்வ இணைய பக்கத்திற்கு செல்லவேண்டும். இந்தப் பக்கத்தில் ‘Atal Bimit Vyakti Kalyan Yojana’ என்ற வசதியை கிளிக் செய்து படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்
இந்தப் படிவத்தை சரியாகப் பூர்த்தி செய்த பிறகு நீங்கள் அதைத் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் அருகிலுள்ள கிளையில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தப் படிவத்துடன், non-judicial stamp paper, ஏபி -1 முதல் ஏபி -4 வரையிலான படிவங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் தகவலுக்கு நீங்கள் ESIC (www.esic.nic.in) இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம். இந்தத் திட்டத்தை நீங்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.