Categories
மாநில செய்திகள்

இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு விட்டால் கடும் நடவடிக்கை… அரசு அதிரடி அறிவிப்பு…

உரிமம் பெறாமல் வாடகைக்கு விட்டால் இருசக்கர வாகனங்கள் கட்டாயம் பறிமுதல் செய்யப்படும் என்று புதுவை போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.

புதுவை போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது, ” புதுச்சேரியின் பல பகுதிகளில் உரிய உரிமம் ஏதும் பெறாமல் இருசக்கர வாகனங்களை பொதுமக்களுக்கு சிலர் வாடகைக்கு விடுவதாக போக்குவரத்துத் துறையின் கவனத்துக்கு வந்துள்ளது. குறிப்பாக சைக்கிள் ஸ்டோர் என்ற பெயரில் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்படும் இத்தகைய செயல்கள் மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளுக்கு முரணானதாகும். உரிமம் பெற்ற இருசக்கர வாகனங்கள் மஞ்சள் நிற நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு இருக்கும்.

இதுவே இதற்கான அடையாளம். மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை உரிமம் பெறாமல் வாடகைக்கு விடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை போக்குவரத்துத் துறையின் உரிய உரிமம் பெற்றபின் வாடகைக்கு விடுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு உரிய உரிமம் இல்லாமல் வாடகைக்கு விடப்படும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் சட்டவிரோத வாகன பயன்பாட்டில் ஈடுபடவேண்டாம்”  கூறியுள்ளார்.

Categories

Tech |