கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி தமிழகத்தில் கல்லூரி மாணவர்களின் தேர்வுகளை இரத்து செய்து அனைவரையும், தேர்ச்சி என அறிவித்தது. அரியர் மாணவர்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு யுஜிசி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தன. மேலும் இது தொடர்பான வழக்கு பலரும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடந்தபோது, வழக்கு விசாரணையை காண ஏராளமானோர் வீடியோ கான்பரன்சில் நுழைந்தனர். தங்களது வீடியோவை மியூட் செய்யாமல் வழக்கு விசாரணையை பார்த்துக் கொண்டிருக்கும் போது பல இடையூறுகள் நீதிமன்றத்திற்கு ஏற்பட்டு நடந்து வழக்கு விசாரணை நிறுத்தப்பட்டது.
இதையடுத்து வழக்கு தொடர்ந்தவர்களை தவிர மற்ற பலரும் வீடியோ கான்பரன்சில் இருப்பதை அறிந்த நீதிபதிகள் காணொளியில் இருந்து மாணவர்கள் வெளியேறாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தனர். பின்னர் லாகின் செய்த பலரையும் வெளியேற்றப்பட்டு வந்தனர். வழக்கு தொடர்ந்து நீடிப்பதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.