Categories
சினிமா தமிழ் சினிமா

“என்றாவது ஒரு நாள்” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்… வலைத்தளங்களில் வைரல்… மகிழ்ச்சியில் படக்குழு…!!

இயக்குனர் வெற்றிமாறன் ‘என்றாவது ஒரு நாள்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

அறிமுக இயக்குனர் வெற்றி துரைசாமி இயக்கத்தில் நடிகர் வித்தார்த் நடித்துள்ள திரைப்படம் ‘என்றாவது ஒருநாள்’. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் சேதுபதி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியிருந்த ராகவன் நடித்துள்ளார். படத்தின் அனைத்து பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார்.

கிராமப்புற மக்களின் எளிமையான வாழ்வையும் கால்நடைகளுடன் அவர்களது அழகான உறவையும், உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்தும் இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது . இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |