பெண் ஒருவர் இரயில் நிலையத்தில் நடந்து சென்ற நபரை தாக்கி துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் சம்பவத்தன்று இரவு 9.30 மணி அளவில் நபர் ஒருவர் ரயிலை விட்டு இறங்கி பிளாட்பார்மில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்து வந்த பெண் ஒருவர் அவரை கீழே தள்ளிவிட்டு அடித்து உள்ளார். பின்னர் தன் ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்த வந்ததால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் அவருடன் சண்டை போட்டதில், பெண்ணின் கையில் இருந்த கத்தி கீழே விழுந்துள்ளது. இதையடுத்து அங்கிருந்து அந்த நபர் தப்பி ஓடியபோதும் அப்பெண் விடாமல் அவரை துரத்தி உள்ளார்.
இந்நிலையில் அந்த நபர் எப்படியோ அந்த பெண்ணிடம் இருந்து தப்பியுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெண்ணின் புகைப்படம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்துள்ளது. எனவே தற்போது காவல்துறையினர் பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு இவரை பற்றிய தகவல் யாருக்கும் தகவல் தெரிந்தாலலோ அல்லது சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாரும் இருந்தாலோ தங்களிடம் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளனர்.