நாடுமுழுவதும் கொரோனா ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களும் பாதிப்புக்கு ஏற்றவாறு ஒவ்வொரு தளர்வுகளையும் கட்டுபாடுகளையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருவகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் மாநில கூடுதல் தலைமை செயலாளர் ராஜீவ் குமார் குப்தா அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில், “அகமதாபாத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. எனவே இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அகமதாபாத் மாநகராட்சி முழுவதும் இரவு 9 மணி – காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நடவடிக்கையானது அடுத்த அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான பால் மற்றும் மருந்து விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.