இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2020-21-ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், 2020 டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தேர்விற்கு (என்டிஎஸ்இ) விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் 21.11.2020 முதல் 30.11.2020 வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30.11 .2020. மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது. மேலும் www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை அறியலாம்” என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.