திருச்செந்தூர் முருகன் கோவிலில், முக.ஸ்டாலினின் மனைவி துர்க்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார்.
தூத்துக்குடி வந்திருந்த திருமதி துர்காஸ்டாலின், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடிஅருணாவுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தார்.சுவாமி தரிசனத்தை முடித்த பின்னர் வெளியே வந்த அவரிடம் பத்திரிகையாளர்கள் திடீர் சுவாமி தரிசனம் பற்றி கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் ”இது வழக்கமான தரிசனம் தான்” என்று பதில் கூறினார்.மேலும் கோயிலுக்குச் செல்வது தனக்கு பிடித்தமான ஒன்று என்றும் கூறினார்.