வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சித்தூர்கேட் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான 13 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த உறவினர் இலியாஸ் என்பவர் ஆபாச படங்களை காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், இதுபற்றி வெளியே யாரிடமும் சொன்னால், உன் அப்பா அம்மாவை கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
இதையடுத்து சில மாதங்கள் கழித்து, சிறுமி கர்ப்பமாகியுள்து பெற்றோருக்கு தெரியவந்தது. பின்னர் இது குறித்து சிறுமியிடம் விசாரித்தபோது தன் உறவினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது பற்றி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, காவல் துறையினர் இலியாஸை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.