நடிகர் சிபி சத்யராஜ் கபடதாரி பட பணிகளை முடித்து ரேஞ்சர் திரைப்படத்திற்கான டப்பிங் பணிகளை துவங்கியுள்ளார்.
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகர் சிபி சத்யராஜ். தற்போது இவர் இயக்குனர் தரணிதரன் இயக்கத்தில் ‘ரேஞ்சர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் மற்றும் மதுசாலினி நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படத்திற்கு அரோல்கரோலி இசையமைத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் யாவாத்மல் மாவட்டத்தில் ஆவ்னி எனும் புலி பல மனிதர்களை உயிருடன் அடித்துக் கொன்று தின்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் தயாராகியுள்ளது.
Dubbing starts today! #Ranger 🐅 @Dharanidharanpv @auraacinemas @nambessan_ramya @iamMadhuShalini pic.twitter.com/FarmnIMlO2
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) November 20, 2020
இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் சிபி சத்யராஜ் ரேஞ்சர் திரைப்படத்திற்கான டப்பிங் பணிகளை துவங்கியுள்ளார். சிபி நடிப்பில் ‘கபடதாரி’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. தற்போது வேகமாக கபடதாரி பட பணிகளை முடித்து ரேஞ்சர் திரைப்படத்திற்கு சென்ற சிபி சத்யராஜை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தமிழ் திரையுலக கதாநாயகர்கள் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகளில் வேகம் காட்டி வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.