ஹாங்காங்க் விவகாரத்தில் அடாவடியாக செயல்படும் சீனாவின் செயலுக்கு எதிராக உலக நாடுகள் கைக்கோர்த்துள்ளன.
இங்கிலாந்து தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் செயல்பட்டு வந்த ஹாங்காங்கை 1997ம் வருடம் சீனாவிடம் ஒப்படைத்துள்ளது. இந்நிலையில் ஹாங்காங் சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் தன்னாட்சி பிராந்தியமாக செயல்பட்டு வந்துள்ளது. ஆனால் ஹாங்காங்கின் தன்னாட்சியை கெடுக்கும் வகையில் சீனா தற்போது அடாவடி செய்து வருகிறது. இதில் குறிப்பாக உலக நாடுகளுக்கு அதிருப்தியை எடுத்து வகையில் தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற ஒரு கொடிய சட்டத்தை ஹாங்காங்கில் கொண்டு வந்ததுள்ளது.
இதன் காரணமாக அந்த சட்டத்தை எதிர்த்து போராடும் மக்களை தனது நிர்வாகத்தின் மூலம் ஒடுக்கியுள்ளது. மேலும் இதற்கு எதிராக போராடிய சட்ட சபை உறுப்பினர்களையும் சீன நிர்வாகம் பதவி நீக்கம் செய்துள்ளது.
சீனாவின் இந்த செயல் உலக நாடுகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கனடா போன்ற உலக நாடுகளின் மந்திரிகள் பதவியிலிருந்து நீக்கிய சட்டமன்ற உறுப்பினர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று சீனாவை வலியுறுத்தியுள்ளனர். சீனாவின் இந்த அடாவடித்தனமான செயல்பாடுகள் சட்டபூர்வ கடமைகளில் இருந்து மீறியதாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் உலக நாடுகள் தனக்கு எதிராக திரும்பி இருப்பது சீனாவுக்குப் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.