Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BigBreaking: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை – அரசு பரபரப்பு உத்தரவு ….!!

ஆன்லைன் ரம்மி தடை செய்யும் அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். 1930 ஆம் ஆண்டு சூதாட்ட தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் சட்டம் இயற்ற அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  ஆன்லைன் ரம்மியால் இளைஞர்கள் பணத்தையும் வாழ்க்கையையும் தொலைத்து விடும் அவலத்தை தடுக்க அவசர சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தண்டிக்கவும் இந்த அவசர சட்டம் வழிவகுக்கும். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பண பரிமாற்றங்களை இணையவழி மூலம் மேற்கொள்வது தடுக்கப்படும். தடையை மீறி ஆன்லைன் ரம்மி விளையாடினால் 5000 அபதாரம், 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் பத்தாயிரம் அபதாரம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை எனவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |