பழங்காலம் முதல் தற்காலம் வரை சூதாட்டம் பல குடும்பங்களின் வாழ்க்கையை சீரழித்து உள்ளது. முன்பெல்லாம் ரம்மி விளையாடுவதற்காக பொதுவான ஒரு இடத்தில் ஆட்கள் கூடி சூதாட்டத்தில் ஈடுபடுவார்கள். தற்போது நவீன கால சூதாட்டமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கள் அனைத்து வீடுகளிலும் வலம் வந்துகொண்டிருந்தன. இவற்றால், பலர் தற்கொலை செய்து தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். பல குடும்பங்கள் சீரழிந்துள்ளது.
இளைஞர்கள் பலர் தங்களது வருங்காலத்தை தொலைத்து விட்டு திரியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து பணம் வைத்து ரம்மி விளையாடுவோர் கணினிகள் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள் தடை செய்யப்படும் எனவும்,
தடையை மீறி ஆன்லைன் ரம்மி விளையாடினால் ரூபாய் ஐந்தாயிரம் அபராதமும் , ஆறு மாதம் சிறை தண்டனை எனவும், ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால், ரூபாய் 10,000 அபராதம், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.