விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் பேஸ் புக் களை குறி வைத்து நகைகளை கொள்ளையடித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாத்தூரை சேர்ந்த நவீன்குமார் என்பவரை திருட்டு வழக்கில் காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்திய போது இந்த மோசடி தெரிய வந்துள்ளது. இவர்கள் பேஸ் புக்கில் பெண்களிடம் நண்பர்களாகப் பழகி , பெண் குரலில் பேசியுள்ளனர் .
பின்னர் தங்களுடைய நகைகளை ஒரு கோவிலில் வைத்து வணங்கினால் செல்வம் பொங்கும் என்றும் ,தங்களுக்கு செல்வம் பெறுகியதாகவும் கூறி அதே போல் வழிபட கூறியுள்ளனர் .இதை நம்பி அந்த பெண்களும் நகைகளை வைத்து வணங்கியுள்ளனர் . அவர்கள் கோவிலை சுற்றி வருவதற்குள் நகைகளை எடுத்துக் கொண்டு இருவரும் ஓடிவிடுவர் .இதையடுத்து நவீன்குமார் மற்றும் ராஜ்குமார் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர் .அவர்களிடமிருந்து, 3 லட்சம் ரூபாய் மற்றும்,61 சவரன் நகைகளையும் கைப்பற்றினர் .