Categories
உலக செய்திகள்

“போதையில் இருந்த கணவர்” திருநங்கை மனைவி கூறிய வார்த்தை…. பின் நடந்த கொடூர சம்பவம்….!!

திருநங்கை ஒருவர் தன் கணவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டவுன்டவுன் மியாமி பகுதியிலிருந்து Ygor Arrudasouza(28) எனும் நபர் தனது மனைவியை கத்தியால் குத்தியதாக காவல்துறையினரிடம் சென்று சரணடைந்துள்ளார். உடனே காவல்துறையினர் கொலை நடந்த இடத்திற்கு விரைந்து சென்று அப்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதையடுத்து கத்தியால் தனது மனைவியை கொலை செய்த வழக்கில் அந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட அவருக்கு பிணை வழங்க மறுத்த நீதிமன்றம் சிறையில்அடைக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், “மியாமி குதியில் உள்ள அந்த நபரின் வீட்டின் படுக்கை அறையில் பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போது செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். கொல்லப்பட்ட அந்த பெண் மியாமியில் ஒருபால் ஈர்ப்பு சமூகத்தினரிடையே பிரபலமானவர் என்றும் அவருடைய பெயர் யுனி கேரி என்றும் உறவினர்கள் கூறினர்” என்று தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இந்த கொலை குறித்து பெண்ணின் கணவர் அளித்த வாக்குமூலத்தில், “சம்பவத்தன்று நான் போதை மருந்து பயன்படுத்தி இருந்தேன். இந்நிலையில் எங்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டபோது என் மனைவி என்னை ‘எனக்கு உன்னை விட சிறந்த ஆண் கிடைப்பார்’ என்று கூறியதால் கோபத்தில் சமையலறைக்கு சென்று கத்தியை எடுத்து சரமாரியாக கேரியை குத்தினேன்” என்று கூறியுள்ளார். அமெரிக்காவில் 2020 ஆம் வருடம் 37வது திருநங்கையாக கேரி கொல்லப்பட்டுள்ளார் என்பாத்து குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |