Categories
உலக செய்திகள்

வாட்ஸ் அப்பில் மெசேஜ் நிரம்பி வழிகிறதா..? அப்ப இந்த ஆப்ஷனை செட் பண்ணுங்க…!!

வாட்ஸ் அப்பில் தானாக மறைந்து போகும் செய்திகள் வசதியை பேஸ் புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் செயலியான வாட்ஸ்அப் தற்போது பல்வேறு புதிய அம்சங்களை வழங்கி வருகிறது. தனது பயனாளர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் ஷாப்பிங் மற்றும் மணி டிரான்ஸ்பர் என பல்வேறு அம்சங்களை சமீபத்தில் வாட்ஸ் அப் வழங்கியுள்ளது. இதையடுத்து தற்போது அனைத்து தரப்பு செய்திகளும் தானாகவே மறைந்து போகும் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது வாட்ஸ் அப்பில் ஏராளமான  குரூப்பில் நாம் இருக்கும்போது அவற்றில் வரும் மெசேஜ்களால் ஸ்டோரேஜ் நிரம்பி வழிகின்றது.

இதனால் வாட்ஸ் அப்பில் இந்த அம்சத்தை கொண்டு நிரம்பும் மெசேஜ்களை குறிப்பிட்ட சில தினங்களுக்குப் பிறகு நீக்கிவிடலாம். மறைந்து போகும் மெசஜ்ஸ் (Disappearing Messages) ஆப்ஷனை நீங்கள் ஆன் செய்திருந்தால் 7 தினங்களுக்குப் பின் குறிப்பிட்ட குழுவில் உள்ள மெசேஜ்கள் மறைந்துவிடும். இதனை உங்கள் மொபைலில் எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம்.

  • முதலில் உங்கள் மொபைலில் வாட்ஸ் அப்பை திறக்கவும்.
  • அதில் குறிப்பிட்ட குழுவை திறந்து சுயவிவர பக்கத்திற்கு செல்லவும். சிறிது கீழே ஸ்க்ரோல் செய்து மறந்துபோகும் செய்திகள்(Disappearing Messages) ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • உங்கள் செயலில் இந்த ஆப்ஷனை நீங்கள் கண்டுபிடிக்க முடியாவிட்டால் புதுப்பிப்பு ஆப்ஷன் இருக்கிறதா என்று கூகுள் பிளே ஸ்டோரில் சரிபார்க்க வேண்டும்.
  • இதில் Disappearing Messages ஐ  ஆன் செய்தால் ஏழு நாட்களுக்குப் பின் அந்த குழுவில்  இருக்கும் செய்திகள் தானாக மறைந்து விடும்.

Categories

Tech |