Categories
டெக்னாலஜி பல்சுவை

வாட்ஸ்அப்பின் புதிய அம்சங்கள்… உடனே install பண்ணுங்க… ஆச்சரியப்படுவீங்க…!!!

வாட்ஸ் அப்பில் செய்திகள் தானாக மறைந்து போகும் அம்சத்தை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் தற்போது பல்வேறு புதிய அம்சங்களை வழங்கிவருகிறது. இது தனது பயனர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் ஷாப்பிங், மணி டிரான்ஸ்ஃபர் என பல்வேறு அம்சங்களை சமிபத்தில் வழங்கியது.
அந்த வரிசையில் தற்போது செய்திகள் தானாக மறைந்து போகும் அம்சத்தினையும் அறிமுகப்படுத்தியுள்ளது.அதாவது வாட்ஸ்அப்பில் நாம் ஏராளமான குழுக்களில் இருப்போம். இவற்றில் வரும் மெசேஜ்களால் நமது ஸ்டோரேஜ் நிரம்பி வழிகின்றது. வாட்ஸ்அப்பின் இந்த அம்சத்தைக் கொண்டு நாம் தானாக அந்த மெசேஜ்களை குறிப்பிட்ட தினங்களுக்குப் பின் மறையச் செய்துக்கொள்ளலாம்.

மறைந்து போகும் செய்திகள் (Disappearing messages) வசதியை நீங்கள் ஆன் செய்திருந்தால் 7 தினங்களுக்குப் பின் குறிப்பிட்ட அரட்டையின் மெசேஜ்கள் மறைந்துவிடும். இதனை எப்படி ஆன் செய்வது எனப் பார்க்கலாம். முதலில் உங்களது மொபைலில் வாட்ஸ்அப்பைத் திறக்கவும். அதில் குறிப்பிட்ட அரட்டையை திறந்து, சுயவிபரப் பக்கத்திற்குச் செல்லவும்.

சிறிது கீழே ஸ்க்ரோல் செய்து, மறைந்துபோகும் செய்திகள் (Disappearing messages) ஆப்ஷனை க்ளிக் செய்யவும். உங்கள் செயலியில் இந்த அம்சத்தை நீங்கள் கண்டுபிடிக்க முடியாவிட்டால், புதுப்பிப்பு ஆப்ஷன் இருக்கிறதா என்று கூகுள் ப்ளே ஸ்டோரில் சரிபார்க்க வேண்டும்.இதில் Disappearing messagesஐ ஆன் கொடுத்தால் 7 நாட்களுக்குப் பின் அந்த அரட்டையில் இருக்கும் செய்திகள் தானாக மறைந்துவிடும்.

Categories

Tech |