மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழகம் வருகை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்று மாலை நான்கு முப்பது மணி அளவில் அரசு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையின்போது அரசியல் சார்ந்த முக்கியமான சந்திப்புகள் இன்றைய தினத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
குறிப்பாக அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க கூடிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு தங்க உள்ள லீலா பேலஸ் ஹோட்டலுக்கு செல்கிறார். அதன் பிறகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் அமைச்சர்கள் ஆகியோர் சென்று அமித் ஷாவை சந்தித்திப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகின்றது.