தமிழக அரசு அரியர் தேர்வை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வரும் இந்த வழக்கில், இன்றைக்கு தமிழக அரசு தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. தமிழக உயர்கல்வித்துறை சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,
அனைத்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களை ஆலோசித்து தான் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் உயர்கல்வித் துறை சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும், அரியர் தேர்வு ரத்து பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணாக இல்லை. அரியர் தேர்வை ரத்து செய்ததில்எந்த விதிமுறைகளும் இல்லை. அரியர் தேர்வு ரத்து செய்ய பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம் உள்ளது எனவும் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.