Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான கரண்டி ஆம்லேட் … செய்து பாருங்கள் …!!!

கரண்டி ஆம்லேட் செய்ய தேவையான பொருள்கள் :

முட்டை                      – 4
வெங்காயம்              – 1
பச்சை மிளகாய்      – 2
மிளகுத் தூள், உப்பு – தேவையான அளவு

செய்முறை : 

முதலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மிளகுத் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளுங்கள்.

அதன் பின்  பெரிய குழி கொண்ட கரண்டியை அடுப்பில் வைத்து, இப்பொழுது அதில் லேசாக எண்ணெய் தடவுங்கள். பின்பு சிறிதளவு முட்டைக் கலவையை ஊற்றுங்கள்.

அடுத்தது  சிறிது நேரம் கழித்துத் திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுங்கள் விருப்பபட்டோர் குழிப்பணியாரச் சட்டியிலும் இதைச் செய்யலாம். இப்பொழுது மிருதுவாக இருக்கும்

Categories

Tech |