Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பாஜகவை தூக்கி சுமக்கணுமா ? கடுமையான அதிருப்தி… முக்கிய ஆலோசனை ..!!

தமிழக முதல்வர், துணை முதல்வர் இன்று மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து முக்கியமான விஷயங்களை பேச இருக்கின்றார்.

இன்று சென்னை வரும் மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா, கலைவாணர் அரங்கத்தில் அரசு நிகழ்ச்சியை முடித்த பிறகு லீலா பேலஸ் ஹோட்டலுக்கு செல்கிறார். அவருடன் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் அமைச்சரும் செல்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும், நட்சத்திர விடுதியில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைந்தாலும் கூட பல்வேறு சூழலில் கடந்த சில மாதங்களாக முரண்பாடுகள் இருப்பதாக தான் பார்க்கப்படுகிறது.

குறிப்பாக விநாயகர் சதுர்த்தி தொடங்கி வைத்து தற்போது நடக்கும் வேல் யாத்திரை வரை தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை. இதற்க்கு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கூட தங்களுடைய அதிர்ச்சியை தமிழக அரசின் மீதும், அதிமுக அவருடைய தலைமையின் மீதும் வெளிப்படுத்தியுள்ளார்கள். தற்போது வரை தமிழக அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக எனப்படும் சாமி அறிவிக்கப்பட்டாலும், பாஜக வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

பாரதிய ஜனதாவை பொறுத்தவரை அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் போட்டியிட விரும்புவதாக மூத்த நிர்வாகிகள் கருதுகின்றனர். அதிமுக நிர்வாகிகளிடம் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டுமா ? என்ற ஒரு கேள்வியும் எழுகிறது. ஏனென்றால் பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை தமிழகத்தில் பெரும் வாக்கு வங்கி என்பது கிடையாது. மிகவும் சொற்பமாக வாக்கு வங்கியை பாஜக கொண்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக பாஜகவை தூக்கி சுமக்க வேண்டுமா ?என்ற ஒரு கேள்வியும் அதிமுக தொண்டர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளிடம் இருக்கின்றது.

நேற்று கூட அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், துணை முதல் அமைச்சரும், முதலமைச்சரும் பேசும் போது கூட கூட்டணியை பொறுத்தவரை பாஜகவுடன்  இணக்கமான ஒரு சூழலில் இருப்பதாகவும்ம்,  அந்த  கட்சியுடன் கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் பேசி இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் இன்றைய கூட்டத்தில் இன்றைய சந்திப்பின் போது அமித்ஷாவுடன் தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை பேச்சுவாரத்தை நடைபெறும் என தெரிகின்றது.

Categories

Tech |