பெரியாா் பல்கலைக்கழகத்தில் பயின்ற முன்னாள் மாணவா்கள் தங்கள் விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவு செய்யுமாறு துணைவேந்தா் தெரிவித்துள்ளாா்.
பெரியாா் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குழந்தைவேலு இன்று வெளியிட்ட செய்தியில், “பெரியாா் பல்கலைக்கழகத்தில் 2015-ஆம் ஆண்டில் இருந்து 2020- ஆம் ஆண்டு வரை பயின்ற முதுநிலை பட்ட மாணவா்கள், ஆய்வியல் நிறைஞா்கள், முனைவா் பட்ட ஆராய்ச்சியாளா்கள் அனைவரும் தங்களின் தற்போதைய விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவு செய்திட வேண்டும்.
பெரியாா் பல்கலைக்கழக இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தங்களின் தற்போதைய மேற்படிப்பு மற்றும் பணி நிலவரம் குறித்து விவரங்களை முன்னாள் மாணவா்கள் பதிவு செய்திட வேண்டும்” என்று தெரிவித்துள்ளாா்.