தொண்டைப்புண், தொண்டை கரகரப்பு, தொண்டைக்கட்டு, சளி, இருமல், போன்ற பிரச்சனைகளுக்கு கருப்பட்டி காபியை கிராம புறங்களில் பெரும் நிவாரணியாகவே அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த கருப்பட்டி காபியை நாள் தோறும் குடிப்பதினால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, புத்துணர்ச்சியைப் தர பெரும் உதவியாக உள்ளது.
தண்ணீர் – 1 கப்
சுக்கு பொடி – 1 டீஸ்பூன்
கருப்பட்டி – 1 டேபிள் ஸ்பூன்
சுக்கு தூள் – 1/2 கப்
மல்லி – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
பனங்கற்கண்டு – 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் சுக்கு பொடி, மிளகு,பனங்கற்கண்டை எடுத்து மிக்சிஜாரில் போட்டு பொடியாக அரைத்து கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு , கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில்அரைத்த சுக்குப் பொடி கலவை, கருப்பட்டியை சேர்த்து, சில நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும்.
பின்பு கொதிக்க வைத்த கலவையை இறக்கி வடிகட்டி எடுத்து பரிமாறினால் சுவையான கருப்பட்டி காபி தயார்.