Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கிறிஸ்துமஸை முன்னிட்டு தயாரிக்‍கப்பட்ட பாரம்பரிய கேக்‍ கலவை …!!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் உதகையில் மதுபானம் உலர் பழங்கள் வாசனை திரவியங்கள் கொண்டு 65 கிலோ கேக் கலவை தயாரிக்கும் பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு முக்கிய அம்சமாகக் கருதப்படும் கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சி உதகையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்றது. பிலீச், பிளம் திராட்சை, கிராம்பு, லவங்கம், பட்டை , ஏலக்காய் மற்றும் மதுபானங்களை கொண்டு 65 கிலோ கேக் கலவையை ஹோட்டல் ஊழியர்கள் தயாரித்தனர். இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்பது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக ஹோட்டல் ஊழியர்கள் மட்டுமே பங்கேற்றனர். இந்தக் கேக் கலவை ஒரு மாதத்திற்கு மூடி வைக்கப்படும். டிசம்பர் மாதம் 20-ம் தேதிக்குப் பிறகு இந்த கேக் கலவையை கொண்டு  கிறிஸ்துமஸ் பிளம் கேக் தயாரிக்கபட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் என்று ஹோட்டல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Categories

Tech |