புதுச்சேரி அருகே கருங்கோழி வளர்ப்புபில் பட்டதாரி சகோதரர்கள் அதிக லாபம் ஈட்டி வருகின்றனர். ஒன்றரை கிலோ அளவிலான கருங்கோலி 650 ரூபாய்க்கு விற்கபடுவதாக கூறுகின்றன.
புதுச்சேரி குளிச்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி சகோதரர்கள் அசோக் , வீரப்பன் இரண்டு ஏக்கரில் ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. நாட்டு மாடு, நாட்டு கோழி, நாட்டு ஆடு, ஆகியவற்றை வளர்த்து வரும் இந்த சகோதரர்கள். கடந்த ஆறு மாதங்களாக கருங்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். கருங்கோழியின் கறி மற்றும் முட்டைகள் மருத்துவ குணம் கொண்டதால் இவற்றை வளர்பதில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.
பிற கோழிகள் ஆண்டுக்கு 80 முட்டைகள் இடும் நிலையில் கருங்கோழிகள் 140 மூட்டைகள் வரை இடுவதாக கூறப்படுகிறது. நாட்டுக்கோழி முட்டை 15 ரூபாய்க்கு விற்கப்படும் போது கருங்கோழி முட்டை 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.