நடிகை அனுஷ்கா ஒரு வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நடிகை அனுஷ்கா தனது அசத்தலான நடிப்பால் ரசிகர்கள் மனத்தைக் கவர்ந்தார். இவர் நடிப்பில் வெளியான ‘அருந்ததி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் பிரம்மாண்ட வெற்றியைக்கண்டது. இந்நிலையில் தற்போது நடிகை அனுஷ்கா பெண் மையக் கதாபாத்திரங்கள் கொண்ட திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டாததாக கூறப்படுகிறது.
சமீபத்தில் அனுஷ்காவிற்கு பெண் மையக் கதாபாத்திரங்கள் கொண்ட மூன்று திரைப்படங்கள் வந்ததாகவும் ஆனால் அந்த திரைப்படங்களில் நடிக்க அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. நடிகை அனுஷ்கா நடிப்பில் கடைசியாக வெளியான ‘சைலன்ஸ்’ திரைப்படமும் சரியான வரவேற்பை பெறவில்லை . இதனால் ஒரு வருடத்திற்கு ஒரு திரைப்படம் மட்டுமே நடிக்க அனுஷ்கா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.