Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி … கல்வி செலவை அரசே ஏற்கும்…. உத்தரவு போட்ட எடப்பாடி …!!

தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில்  227 இடங்கள் அரசு மருத்துவக்கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டது. இது போக மற்ற இடங்களில் தனியார் கல்லூரிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்த கடனை செலுத்துவது எப்படி என்று தெரியாமல் தவிக்கிறோம். ஆனாலும்கூட எப்படியோ சிரமப்பட்டு தான் போகிறோம் என்று மாணவர்களும், பெற்றோர்களும் தெரிவித்தார்கள். இந்த நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை திமுக ஏற்றுக்கொள்ளும் என்ற முக்கியமான அறிவிப்பை திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது  இந்த கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |