மருத்துவ கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது அறிவித்திருக்கிறார்.
மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தனியார் கல்லூரிகளில் இடம் பிடித்த அரசுப்பள்ளி மாணவர்களுடைய கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று தற்போது தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்க பெற்றுள்ள மாணவர்கள் கல்வி கட்டணத்தை செலுத்துவதில் உள்ள சிரமத்தை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இதனை அறிவித்து இருப்பதாக தமிழக முதலமைச்சர் செய்துள்ளார்.
அந்த அறிவிப்பின்படி மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் சேர ஆணை பெற்ற அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் கல்வி உதவித்தொகைக்கு காத்திராமல் உடனடியாக செலுத்தும் விதமாக தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் ஒரு சுழல் நிதியை உருவாக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், அந்த நிதியில் இருந்து மாணவர்களுக்கான கல்வி, விடுதிகள் போன்ற செலவை தமிழக அரசே நேரடியாக கல்லூரி நிர்வாகத்துக்கு செலுத்தி விடும் என்று தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.