சிறுவயதில் சாப்பாட்டுக்காக கஷ்டப்பட்ட நபர் ஒருவர் தற்போது கோடீஸ்வரராக மாறியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடா நாட்டில் உள்ள டொரண்டோவில் வசித்து வருபவர் ஷாஸ் சாம்சன்(50). சிறந்த சமையல் கலை நிபுணரான இவர் கடந்த வருடம் ஒரு பெரிய ஹோட்டலை துவக்கியுள்ளார். கோடீஸ்வரரான இவர் கொரோனா காரணமாக தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டதால் தனது சிறுவயதில் கஷ்ட பட்டதால் இதுபோன்ற பாதிப்புகளை கடந்து செல்ல சுலபமாக இருந்துள்ளது. இதுகுறித்து ஷாஸ் கூறுகையில், “கோவையில் ரயில் தண்டவாளம் பக்கத்தில் குடிசையில் எனது பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் வசித்து வந்தேன். என்னுடைய அப்பா பீடி சுற்றும் தொழிலாளி.
இந்நிலையில் ஒருநாள் என்னுடைய சகோதரர்களுடன் நான் சென்றபோது அவர்கள் என்னை பேருந்து நிலையத்தில் விட்டு சென்று விட்டனர். அதன் பின்னர் அவர்களை நான் பார்க்காததால் எங்கு செல்வது என்று தெரியாமல் ரோட்டிலேயே சுற்றி அலைந்தேன். பசிக்கும் போது அங்குள்ள ஒரு ஹோட்டல் முன்பு தினமும் உட்கார்ந்து கொள்வேன். அங்கு குப்பைகளில் மீதமுள்ள உணவை கொட்டுவார்கள். அப்போது அதை எடுத்து சாப்பிட்டு தான் வளர்ந்து வந்தேன். இரவு நேரங்களில் திரையரங்குகளின் முன் படுத்து தூங்குவேன்.
அப்போது ஒருநாள் என்னை குழந்தைகள் அதிகாரிகள் பார்த்து விசாரித்து, பின்னர் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அந்த ஒரு நிமிடம் தான் என்னுடைய வாழ்க்கையையே இந்த நிலைக்கு மாற்றியுள்ளது. அந்த காப்பகத்தில் 8 வயதாக இருந்த என்னை கனடாவைச் சேர்ந்த குழந்தையில்லா தம்பதிகள் தத்தெடுத்தனர். மேலும் அவர்கள் கனடாவில் என்னுடைய விருப்பம் போல் படிக்க வைத்தனர். சிறுவயதில் நான் உணவுக்காக கஷ்டப்பட்டதால் பெரிய சமையல் கலை நிபுணர் ஆக வேண்டும் என்று நான் விரும்பினேன்.
என்னுடைய விருப்பப்படியே என்னுடைய வளர்ப்பு பெற்றோர் படிக்க வைத்ததால் தற்போது பெரிய ஓட்டல் ஒன்றை போது நடத்தி வருகிறேன். சிறுவனாக இருக்கும்போது ரோட்டில் சுற்றி திரிந்த அந்த நேரத்தில் குழந்தைகளை அதிகாரிகள் என்னை பார்க்கா விட்டால் எனது வாழ்க்கை இப்படி மாறி இருக்காது. தற்போது என்னைப்போல் கஷ்ட்டப்படும் 22 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறேன்” என்று சாம்சன் கூறியுள்ளார்.