திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. கொரோனா அச்சம் காரணமாக பக்தர்களுக்கு இந்நிகழ்ச்சியில் அனுமதி வழங்கக்கப்படவில்லை.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. மலைக் கோவிலின் மேற்கு பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் சண்முகர் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. முன்னதாக அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றன. பழனி கோவில் இணை ஆணையர் கிராந்திகுமார்பதி டி.எஸ். பி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கொரோனா அச்சம் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. நேற்று மாலை பழனி அடிவாரத்தில் அமைந்துள்ள பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில் வள்ளி-தெய்வானையுடன் முத்துகுமார சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.