Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மருத்துவப்படிப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

மருத்துவ கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை திமுக ஏற்கும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு மருத்துவ படிப்பு கலந்தாய்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5சதவிகித உள்ஒதுக்கீடு சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 18 ஆம் தேதி முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. முதல் 3 நாட்கள் நாட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

இந்நிலையில், இந்தக் கல்வியாண்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.க ஏற்கும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தற்போது அறிவித்துள்ளார்.

Categories

Tech |