அதி தீவிர புயலாக கரையை கடந்த ஃபானி தற்போது வலு குறைந்தது .
தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தாழ்வு மண்டலமாக மாறி, பின்னர் அது அதிதீவிர புயலாக உருவெடுத்தது. இதற்க்கு ஃபானி என்று பெயரிடப்பட்டது. இந்த ஃபானி புயல் தமிழகத்தின் வடகடலோர பகுதியில் கரையைக் கடக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது மிக தீவிர புயலாக மாறி வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, ஒடிசாவை நோக்கி சென்றது.
அதி தீவிர புயலாக கரையை கடந்த ஃபானி தற்போது வலு குறைந்தது . தீவிர புயலாக வலு குறைந்து புவேனேஷ்வர் – கட்டாக் இடையே புயல் நகர்கிறது .புயல் நகரும் பகுதிகளில் தற்போது 150 முதல் 160 கிமீ வேகத்தில் காற்று வீசுகிறது.